டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரின் விலை, தொழில்நுட்ப விபரங்கள்... முதல் லாட் விற்று தீர்ந்தது
இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான டிசி அவந்தியின் விலை மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வர்ணிக்கப்படும் இந்த கார் மாடலை கார் கஸ்டமைஸ் செய்வதில் புகழ்பெற்ற டிசைனர் திலீப் சாப்ரியாவின் டிசி டிசைன் ஸ்டூடியோ வடிவமைத்துள்ளது.
உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் பிற ஸ்போர்ட்ஸ் கார்களை ஒப்பிடும்போது மிக குறைவான விலை கொண்டதாக இருக்கிறது. எனவே, இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விலை மற்றும் தொழில்நுட்ப விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

முதல் லாட் காலி
ஒவ்வொரு கார் மாடலிலும் 4,000 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று டிசி நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்தநிலையில், டிசி அவந்தி காரின் முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட உள்ள 500 கார்களுக்கும் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கம் முதல் டெலிவிரி துவங்கப்படும்.

எஞ்சின்
டிசி அவந்தி காரில் 2.0 லிட்டர் ஃபோர்டு ஈக்கோஸ்பூஸ்ட் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் யூரோ- 5 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களை கொண்டது. மேலும், ஏற்றுமதி செய்யும்போது யூரோ-6 மாசுக்கட்டுப்பாடு கொண்டதாக இந்த எஞ்சினை ட்யூனிங் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர் விபரம்
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சின் அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பரிமாணம்
இந்த கார் 4,550மிமீ நீளமும், 1,965மிமீ அகலமும், 1,200மிமீ உயரமும் கொண்டது. 2,700மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சேஸீ
இரண்டு பேர் செல்லும் இருக்கை வசதி கொண்ட இந்த 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் ட்யூபியூலர் ஸ்பேஸ் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரோல்கேஜும் கொடுக்கப்பட்டுள்ளது. கார்பன் ஃபைபர் கலவையிலான பாலிமர் பாடி கொண்டது. இந்த கார் 1,562 கிலோ எடை கொண்டது.

பாதுகாப்பு அம்சங்கள்
இந்த காரில் ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக்குகள் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் 255/35 டயர்களும், பின்புறத்தில் 295/30 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஏபி ரேஸிங் காலிபர்களுடன் கூடிய 330மிமீ வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்
பை ஸினான் ஹெட்லைட்டுகள், 20 இஞ்ச் அலாய் வீல்கள், டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை
முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட உள்ள 500 கார்களும் அறிமுக சலுகை விலையாக ரூ.34.93 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த லாட்டில் விற்பனை செய்யப்பட உள்ள டிசி அவந்தி கார்கள் ரூ.38 லட்சம் முதல் ரூ.40 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 10 வண்ணங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








