'மேட் இன் இந்தியா' டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காருக்கு முன்பதிவு ஆரம்பம்!
இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான டிசி அவந்தி காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த விலை ஸ்போர்ட்ஸ் கார் மாடலான அவந்தி விரைவில் உற்பத்திக்கு செல்ல இருக்கிறது.

அமிதாப் அறிமுகம்
கடந்த 2012ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த காரை அறிமுகம் செய்து வைத்தார்.

மேட் இன் இந்தியா மாடல்
இந்த கார் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சின்
இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரில் ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் எஞ்சின் 240 எச்பி பவரையும், 366 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

விலை
இப்போது முன்பதிவு செய்வோருக்கு ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் டெலிவிரி கொடுக்கப்படும்.

விற்பனை
நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரின் டெலிவிரி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதலீடு
இந்த கார் தயாரிப்புக்கு ரூ.85 கோடி வரை முதலீடு செய்துள்ளது டிசி டிசைன்ஸ் நிறுவனம்.

லிமிடேட் எடிசன்
அனைத்து கார் மாடல்களும் 4,000 என்ற உற்பத்தி இலக்குடன் தயாரிக்கப்பட உள்ளதாக டிசி தெரிவித்துள்ளது. இலக்கை அடைந்தவுடன் அந்த கார் மாடல் மார்க்கெட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என டிசி டிசைன்ஸ் நிறுவனர் திலீப் சாப்ரியா தெரிவித்துள்ளார்.

புதிய ஆலை
குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 2,000 அவந்தி ஸ்போர்ட்ஸ் கார்களை உற்பத்தி செய்ய டிசி இலக்கு வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








