அமெரிக்கன் பிராண்டு 'பகி' மாடல் எஸ்யூவியோ?.. அதெல்லாம் இல்லீங்க!
பார்த்தவுடன் அமெரிக்காவின் வென்டுரி பகி கார் மாடலோ என்ற சந்தேகம் வருவது இயல்பு. ஆனால், இது மஹிந்திரா தார் ஜீப்பில் டிசி நிறுவனம் மாடிஃபிகேஷன் செய்த மாடல்.
தார் ஜீப் பிரியர்களின் தாகத்தை தணிக்கும் வகையில், ஓர் ஸ்டைலான மாடலாக இதனை மாற்றியுள்ளனர் டிசி டிசைன் நிறுவனத்தினர். இந்த காரின் படங்கள் மற்றும் விலை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணாலம்.

முகப்பு
பிரத்யேக வடிவமைப்பு கொண்ட புரொஜெக்டர் ஹெட்லைட், பழைய மஹிந்திரா ஸ்டைலை பிரதிபலிக்கும் கிரில் போன்றவை சிறப்பு சேர்க்கின்றன. மேலும், ஜீப் முழுவதும் குரோம் பாகங்கள் கண்ணை பறிக்கின்றன.

பக்கவாட்டு டிசைன்
அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கும் இந்த மாடலில் புதிய அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்சுகள், ஓபன் டாப் போன்றவை சிறப்பாக தெரிகின்றன.

பின்புற டிசைன்
கம்பீரமான பம்பர், டெயில் லைட்டுகள் சிறப்பு சேர்க்கின்றன.

இன்டிரியர்
எல்சிடி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்போர்ட் பெடல்கள் மற்றும் இருக்கைகள் போன்றவை முக்கிய அம்சங்கள்.

விலை
ரூ.6 லட்சம் ஆரம்ப விலை முதல் இந்த கஸ்டமைசேஷன் பணிகளுக்கு கட்டணமாக டிசி நிர்ணயித்துள்ளது. இன்டிரியருக்கு தனியாக ரூ.2 லட்சமாக கொடுக்க வேண்டும். ஏசி உள்ளிட்ட வசதிகளுக்கும் கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தார் எஸ்யூவியை கொடுத்து 2 மாதங்களில் இதுபோன்று மாற்றித் தரப்படும் என டிசி டிசைன்ஸ் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








