சொகுசு கார்களை திரும்பி பார்க்க வைத்த இன்னோவா!
சொகுசு பயணங்களுக்கு அதிபதியாக விளங்கும் டொயோட்டா இன்னோவா காரில் ஏராளமான சிறப்பு வசதிகளை சேர்த்து ஓர் முழுமையான சொகுசு மாடலாக மாற்றியிருக்கிறது டிசி டிசைன்ஸ் நிறுவனம்.
வெளிப்புறத்தில் முரட்டுத் தோற்றத்தையும், உட்புறத்தில் மதிமயங்கச் செய்யும் வசதிகள் மற்றும் அலங்காரத்தையும் செய்து அசத்தியிருக்கிறது. கஸ்டமைஸ் செய்யப்பட்ட இந்த புதிய இன்னோவாவின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

வெளிப்புற மாற்றங்கள்
முகப்பில் ஹெட்லைட்டை மட்டும் விட்டுவிட்டு பம்பர், கிரில் என அனைத்தையும் மாற்றி புதிய தோற்றத்தை கொடுத்துள்ளனர். பனி விளக்குகள் அறையும் குரோம் பீடிங் சுற்றிலும் கொடுக்கப்பட்டு பளிச்சென கவர்கிறது. பக்கவாட்டில் மிக கம்பீரமான கிளாடிங் போன்ற தோற்றத்தை கொடுக்கும் வகையில் பாடி மாற்றப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல்களை பொருத்தியுள்ளனர்.

சாய்மான இருக்கை
பின்புறத்தில் சாய்மான வசதிகொண்ட இரண்டு இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் மிக மிக சொகுசாக இருப்பதுடன், பயணிகளின் விருப்பத்திற்கேற்ப எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்.

பொழுதுபோக்கு வசதி
பொழுதுபோக்கு சாதனங்களை எளிதாக இயக்கும் வகையில், ஆர்ம் ரெஸ்ட்டில் பொத்தான்கள் கொடுக்கப்பட்டிருப்பதை காணலாம். மேலும், அதற்கு மேலே காபி கிளாஸ் அல்லது பொருட்களை வைப்பதற்கான சிறிய பலகை கொடுக்கப்பட்டுள்ளது. குஷன் ஆர்ம் ரெஸ்ட்டும் பயணத்தின்போது சிறப்பானதாக இருக்கும்.

லைட் செட்டிங்
கூரை மீது நட்சத்திர அமைப்பிலான சிறிய எல்இடி விளக்குகள் உள்ளன. மேலும், விரும்பிய வகையில் பிரகாசத்தையும், வண்ணத்திலும் ஒளிரும் மூட் லைட் மற்றும் ரீடிங் லைட்டும் இருக்கிறது.

டிவி திரைகள்
பின்னால் அமரும் இரண்டு பயணிகளுக்கு தனித்தனியாக 15.7 இஞ்ச் டிவி திரைகள் மற்றும் ஹெட்போன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உல்லாச பயணம்
மொத்தத்தில் ஓர் உல்லாச பயண அனுபவத்தை இந்த கஸ்டமைஸ் இன்னோவா தரும் என்பதில் ஐயமில்லை. விலை பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.

தொடர்புக்கு
சென்னை, எக்மோரில் உள்ள டிசி டிசைன்ஸ் நிறுவனத்தின் ஷோரூமை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

டொயோட்டா இன்னோவாவின் சிறப்பம்சங்கள், எத்தனை வேரியண்ட்டுகள் உள்ளன, வேரியண்ட்டுகளில் இருக்கும் வசதிகளை ஒப்பீடு செய்து பார்ப்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








