இது இன்னோவாதான்னு சொன்னா நம்பவா போறீங்க?!
நம் நாட்டின் பிரபலமான கார் கஸ்டமைஸ் நிறுவனமான டிசி டிசைன்ஸ் மீண்டும் டொயோட்டா இன்னோவா காருக்கான புதிய கஸ்டமைஸ் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு சொகுசு கார் போன்றே தோற்றமளிக்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள டொயோட்டா இன்னோவா காரின் படங்களையும், சில வசதிகள் மற்றும் கட்டண விபரங்களையும் ஸ்லைடரில் காணலாம்.
செய்தியின் தொடர்ச்சியை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

மீண்டும் இன்னோவா
மிகச் சிறந்த இடவசதி கொண்டதாகவும், அலுங்கல், குலுங்கல்கள் குறைவாகவும் உடைய டொயோட்டா இன்னோவா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, டிசி டிசைன்ஸ் நிறுவனத்திற்கும் மிக பிடித்தமான மாடலாக இருக்கிறது. எனவே, இன்னோவாவுக்கான புதிய கஸ்டமைஸ் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.

அம்சங்கள்
வெளிப்புறத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. ஆனால், பக்கவாட்டில் பெரிய பிளாஸ்டிக் கிளாடிங், ஃபுட் போர்டு, மற்றும் கிரில்லில் டிசி டிசைன்ஸ் லோகோ, புதிய பம்பர் போன்றவை இந்த கஸ்டமைஸ் இன்னோவாவின் கம்பீரத்தை கூட்டுகின்றன. புதிய அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், உட்புறத்தில்...

இன்டிரியர்
வழக்கம்போல் இன்டிரியரில் மிக அசத்தலாக வேலைப்பாடுகளையும், வசதிகளையும் கொடுத்துள்ளது. சாய்மான வசதி கொண்ட கிங் சைஸ் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. டிவி, மியூசிக் சிஸ்டம் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளன. மனதை மயக்கும் வகையில் விளக்குகளும் கூரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகள்
நடுவில் ஆர்ம்ரெஸ்ட், சிறிய டேப்லேட் கம்ப்யூட்டர் பொருத்துவதற்கான வசதி, மியூசிக் சிஸ்டம், ஏசி.,யை இயக்குவதற்கான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை பொதுவான வசதிகள்தான். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உட்புறத்தை பல்வேறு மாடல்களில் டிசைன் செய்து கொடுக்கிறது டிசி.

கட்டண விபரம்
டொயோட்டா இன்னோவாவுக்கு ரூ.5.5 லட்சம் முதல் கஸ்டமைஸ் பேக்கேஜுகள் இருப்பதாக டிசி டிசைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








