400 எச்பி கொண்ட பவர்ஃபுல் எஞ்சின் ஆப்ஷனிலும் வருகிறது டிசி அவந்தி கார்!
இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான டிசி டிசைன் நிறுவனத்தின் அவந்தி கார் தற்போது தீவிர சோதனை ஓட்டங்களில் இருக்கிறது. மிக குறைவான விலையில் வரும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்பதுடன், இது ஓர் இந்திய தயாரிப்பு என்ற முத்திரையும் கார் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த கார் இரண்டுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறப்பம்சங்கள்
கார்பன் ஃபைபர் பாடி, ரோல் கேஜ் கொண்ட சேஸீ கொண்ட இந்த கார் மிட் எஞ்சின் அமைப்பு கொண்டது. பிரபல வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான டிசைன் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எஞ்சின்
இந்த காரில் ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிகபட்சமாக 240 பிஎச்பி பவரையும், 340 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும். இதுதவிர, மற்றொரு எஞ்சின் மாடலிலும் வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வி6 எஞ்சின்
2.0 லிட்டர் ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து வி6 எஞ்சின் கொண்ட மாடலிலும் டிசி அவந்தி வர இருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 400 எச்பி பவரை அளிக்கும்.

இதர அம்சங்கள்
இந்த காரின் முன்புறத்தில் 255/35 டயர்களும், பின்புறத்தில் 295/30 டயர்களும் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், 19 இஞ்ச் அலாய் வீல்கள் கொண்டதாக வருகிறது.

ஏபிஎஸ் பிரேக்
330மிமீ டிஸ்க் கொண்ட பிரேக்குகள், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் அமைப்பு, எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் தொழில்நுட்பங்களும் இடம்பெற்றிருக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

விலை
ரூ.30 லட்சத்தையொட்டி விலையில் வர இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், தலேகானில் உள்ள டிசி டிசைன் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








