தீபாவளியையொட்டி கார்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள்!

By Saravana

பண்டிகை காலத்தை முன்னிட்டு கார்களுக்கு தொடர்ந்து சிறப்புச் சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எக்ஸ்சேஞ்ச் போனஸ், விலையில் தள்ளுபடி, இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஆக்சஸெரீஸ்கள் என இந்த சிறப்புச் சலுகைகள் பட்டியல் நீள்கிறது.

பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு வசதியாக இந்த சிறப்புச் சலுகைகள் விபரங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.


செவர்லே

செவர்லே

செவர்லே பிராண்டில் கார் விற்பனை செய்யும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அனைத்து மாடல்களுக்கும் தீபாவளி சலுகைகளை அறிவித்திருக்கிறது. ஸ்பார்க் காருக்கு ரூ.63,000 வரையிலும், பீட் காருக்கு ரூ.78,000 வரையிலும் அதிகபட்ச சலுகைகளை வழங்குகிறது. செயில் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.43,000 வரையிலும், செயில் செடான் காருக்கு ரூ.45,000 வரையிலும் சலுகைகளை வழங்குகிறது. க்ரூஸ் காருக்கு ரூ.60,000 மதிப்புடைய சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. என்ஜாய் மற்றும் தவேரா கார்களுக்கு முறையே ரூ.65,500 மற்றும் ரூ.47,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம். இவற்றில் விலையில் தள்ளுபடி, லாயல்டி போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனஸ் ஆகியவை அடங்கும்.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா நானோ காருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையிலும் மதிப்புடைய சலுகைகளை பெறலாம். இன்டிகா காருக்கு ரூ.40,000 வரையிலும், விஸ்டா காருக்கு ரூ.55,000 வரையிலும் சலுகைகள் இருக்கின்றன. இன்டிகோ இசிஎஸ் செடான் காருக்கு ரூ.45,000 வரையிலும், சுமோ கோல்டு எஸ்யூவிக்கு ரூ.35,000 வரையிலும், டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.95,000 வரையிலும் சலுகைகளை பெற முடியும்.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஃபோக்ஸ்ஃபெஸ்ட் சலுகை திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போலோ காருக்கு இலவச இன்ஸ்யூரன் மற்றும் இதர சலுகைகள் உள்ளன. இதேபோன்று, வென்ட்டோ, ஜெட்டா கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சிறப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

 டொயோட்டா

டொயோட்டா

இன்னோவா, எட்டியோஸ், லிவா ஆகிய கார்களுக்கு சிறப்பு சலுகைகளை டொயோட்டா வழங்குகிறது. இன்னோவாவிற்கான இன்ஸ்யூரன்ஸில் 21 சதவீத தள்ளுபடியும், ரூ.10,000 விலையில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எட்டியோஸ் செடான் காருக்கு ரூ.5,000 மதிப்புக்கு இலவச ஆக்சஸெரீஸ் மற்றும் ஒரு ரூபாயில் ஓர் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்ஸ் ஆகிய சலுகைகள் அமலில் உள்ளன. லிவா காருக்கு ரூ.10,000 தள்ளுபடியும், ரூ.5,000 மதிப்புக்கு இலவச ஆக்சஸெரீஸ்களையும் பெறலாம்.

வால்வோ

வால்வோ

சொகுசு கார் தயாரிப்பாளரான வால்வோ நிறுவனம் வி40 கிராஸ்கன்ட்ரி காருக்கு ரூ.2.5 லட்சம் வரையிலும், எஸ்80 செடான் காருக்கு ரூ.5.5 லட்சம் வரையிலும் சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது.

ஆடி

ஆடி

ஆடி கார் நிறுவனம் க்யூ5 எஸ்யூவிக்கு ரூ.4 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை வழங்குகிரது. ஏ8 செடான் காருக்கு ரூ.8 லட்சம் வரையிலும், ஏ6 காருக்கு ரூச4 லட்சம் வரையிலும் சிறப்புச் சலுகைகள் நடைமுறையில் உள்ளன.

ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனமும் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. ஐ10 ஹேட்ச்பேக் காருக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. சான்ட்ரோ ஸிங் காருக்கு ரூ.10,000 தள்ளுபடியும், இலவச இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாக பெறலாம். இயான் காருக்கு ரூ.13,500 தள்ளுபடியும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் எஞ்சின் கொண்ட இயான் காருக்கு ரூ.6,000 தள்ளுபடி, இலவச இன்ஸ்யூரன்ஸ் வழங்கப்படுகிறது. வெர்னா 1.4 லிட்டர் பெட்ரோல் மாடலுக்கு ரூ.25,000 வரையிலும், 1.6 லிட்டர் பெட்ரோல் மாடலுக்கு ரூ.17,000 வரையிலும் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

ஜாகுவார் லேண்ட்ரோவர்

ஜாகுவார் லேண்ட்ரோவர்

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் எவோக் எஸ்யூவிக்கு ரூ.1.5 லட்சம் தள்ளுபடி, ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ மற்றும் லாயல்டி போனசாக ரூ.75,000 வரை வழங்குகிறது. ஜாகுவார் எக்ஸ்எஃப் செடான் காருக்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி, ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.75,000 வரை லாயல்டி போனசை வழங்குவதாக தெரிவிக்கிறது.

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனம் 1 சீரிஸ் காருக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது. 7 சீரிஸ் காருக்கு ரூ.14 லட்சம் வரையிலான சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

நிசான்

நிசான்

நிசான் நிறுவனம் மைக்ரா காருக்கு ரூ.40,000 வரையிலான சலுகைகளையும், சன்னி செடான் காருக்கு ரூ.92,500 வரையிலும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. எவாலியா எம்பிவி காருக்கு இலவச இன்யூரன்ஸும், டெரானோ எஸ்யூவிக்கு ரூ.50,000 வரையில் சேமிப்புச் சலுகைகளையும் வழங்குவதாக தெரிவிக்கிறது.

 மாருதி

மாருதி

மாருதி நிறுவனம் தனது 4 கார் மாடல்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.32,000 வரையில் தள்ளுபடி மற்றும் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. ஈக்கோ காருக்கு ரூ.8,000 தள்ளுபடியும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்குகிறது. வேகன் ஆர் காருக்கு ரூ.50,000 வரையிலான சேமிப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரிட்ஸ் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.40,000 தள்ளுபடியும், ரூ.35,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் கிடைக்கும். டிசையர் காரின் டீசல் மாடலுக்கு ரூ.5,000 தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்குகிறது. பெட்ரோல் மாடலுக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

குறிப்பு

குறிப்பு

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்புச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் டீலருக்கு டீலர் மாறுபடும். கூடுதல் தகவல்களுக்கு டீலர்களை அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், டீலர்கள் சார்பில் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளையும் கேட்டு தெரிந்துகொண்டு காரை முன்பதிவு செய்யுங்கள்.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2014, 11:08 [IST]
English summary
Carmakers is offering huge benefits like cash discounts, exchange bonuses, loyalty bonuses, insurance.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+