மும்பையை, பைக்கில் வலம் வந்த இளம் ஹீரோவும், பெண் தயாரிப்பாளரும்...!!
ஆக்ஷன், காமெடி மசாலாவில் உருவான மெயின் தேரா ஹீரோ என்ற ஹிந்தி சினிமா நாளை ரிலீசாகிறது. இந்த படத்தின் நாயகனாக வருண் தவானும், இலியான டிக்ரூஸ் மற்றும் நர்கீஸ் ஃபக்ரி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஏக்தா கபூர் தயாரித்துள்ளார். இந்த நிலையில், இந்த படத்தின் புரோமோஷனுக்காக வருண் தவான் மும்பையில் நேற்று பைக் பயணம் மேற்கொண்டார். அப்போது, நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்ற அவர் அங்கு கிடைத்த ரசிகை ஒருவரை பைக்கில் ஏற்றி அவர்களுக்கு சிலிர்ப்பூட்டினார்.
கடைசியாக, படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூரை பைக்கில் அழைத்துச் சென்றார். அது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ஏனெனில், இதுவரை ஒருமுறை கூட ஏக்தா கபூர் பைக்கில் சென்றது கிடையாதாம். இதுதான் அவருக்கு முதல் பைக் பயணமாம். அதுகுறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கற்புடன் ஒப்பீடு
பைக்கில் ஏறாததை தனது கற்புடன் ஒப்பிட்டு கூறிய ஏக்தா கபூர், இதுவரை பைக்கில் ஏறாமல் நான் காத்து வந்த கற்பை வருணிடம் இழந்து விட்டேன் என்று கூறி நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்தினார்.

முதல் பயணம்
இதுவரை ஒருமுறை கூட பைக்கில் ஏறியது இல்லை என்றும், இதுதான் எனது முதல் பைக் பயணம் என்று ஏக்தா கபூர் கூறினார்.

போதும்டா சாமி
இதுகுறித்து வருண் தவான் குறிப்பிடுகையில்," இதுவரை எந்தவொரு பெண்ணிடமும் நான் இவ்வளவு கெஞ்சியதில்லை. ஒருவழியாக ஏக்தா கபூரை பைக்கில் ஏற்றி விட்டேன் என்று கூறி பெருமூச்சு விட்டார்.

கதாநாயகிகள் இல்லை
இந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் இரண்டு கதாநாயகிகளும் வரவில்லை.

ரசிகைகள்
இந்த புரொமோஷன் நிகழ்ச்சியின்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரசிகைகளில் சிலர் தேர்வு செய்யப்பட்டு சிறிது தூரம் வருணுடன் பின்னால் அமர்ந்து பயணித்தனர்.

பைக் மாடல்கள்
தனது பைக் பயணத்தின்போது ஒரு பகுதியை அடைந்தவுடன், அங்கிருந்து புதிய வேறு பைக்கில் வருண் பயணித்தார். கேடிஎம் டியூக், புல்லட் மற்றும் பஜாஜ் அவென்ஜர் பைக்குகளை ஓட்டினார்.

தெலுங்கு படம் தழுவல்
தெலுங்கில் வெளியிடப்பட்ட கண்டிரீகா என்ற படத்தின் கதையை தழுவி இந்த புதிய ஹிந்தி சினிமா ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

படம் ரிலீஸ்
இந்த புதிய ஹிந்தி சினிமா நாளை ரிலீசாகிறது.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக!!


Click it and Unblock the Notifications








