லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் எலியோ காருக்கு எகிடுதகிடான முன்பதிவு!

By Saravana

எலியோ 3 சக்கர காருக்கு இதுவரை 11,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எலியோ மோட்டார்ஸ் நிறுவனம் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற புதிய மூன்று சக்கர காரை வடிவமைத்துள்ளது.

தரமான கட்டமைப்பு, அதிக எரிபொருள் சிக்கனம், சொகுசு என அனைத்தையும் ஒருங்கே தரும் வகையில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. நவீன பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லாமல் வந்திருக்கும் இந்த புதிய கார் குறித்த சுவையான கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விறுவிறுப்பான முன்பதிவு

விறுவிறுப்பான முன்பதிவு

அமெரிக்காவில் இந்த காருக்கு 100 டாலர் முதல் 1000 டாலர் வரை பெற்றுக் கொண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகிறது. 1000 டாலர் செலுத்தும் வாடிக்கையாளர்களின் தன் மீது வைத்த நம்பகத்தன்மையை போற்றும்போது, காரை வாங்கும்போது 500 டாலர் வரை தள்ளுபடி வழங்குவதாக எலியோ உறுதியளித்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 70 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் செல்லும். 0-100 கிமீ வேகத்தை 9.6 வினாடிகளில் கடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பான பேலன்ஸ்

சிறப்பான பேலன்ஸ்

இது ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. எனவே, புவியீர்ப்பு விசை மையம் மற்றும் எடை ஆகியவை முன்னோக்கி இருப்பதால் சிறந்த பேலன்ஸ் கொண்டதாக இருக்கும்.

 டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

இதன் 3 சக்கரங்களிலும் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் இணைந்து செயல்புரியும் வகையில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 15 இஞ்ச் சக்கரங்கள் எலியோவுக்கு கூடுதல் பலத்தையும், தோற்றத்தையும் வழங்குகிறது.

2 சீட்டர்

2 சீட்டர்

இந்த காரில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும். முன்னால் ஒருவரும், பின்புறம் ஒருவரும் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 35 கிமீ மைலேஜ் தரும் என்கிறது எலியோ மோட்டார்ஸ். நகர்ப்புற டிரைவிங்கில் 20.63 கிமீ மைலேஜை தரும் என்கிறது எலியோ.

 இடைநில்லா பயணம்

இடைநில்லா பயணம்

இதில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 1,000 கிமீ வரை செல்லலாம் என்கிறது எலியோ மோட்டார்ஸ்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

3 ஏர்பேக்குகள், ரோல் கேஜ் ஃபிரேம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. முதற்கட்ட கம்ப்யூட்டர் சோதனைகளில் இந்த காருக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக எலியோ மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

 விலை

விலை

இந்த காருக்கு 6,800 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.4 லட்சமாகும்.

தயாரிப்பு

தயாரிப்பு

அடுத்த ஆண்டு முதல் இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட இருப்பதாக எலியோ மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 7, 2014, 17:50 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+