மனிதக் கழிவு எரிவாயுவில் இயங்கும் பஸ்: இங்கிலாந்தில் அறிமுகம்!
மனிதக் கழிவு மற்றும் வீணாகும் உணவுப்பொருட்களிலிருந்து உற்பத்தியாகும் பயோ- மீத்தேன் வாயுவைக் கொண்டு இயங்கும் உலகின் முதல் பஸ் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Poo Bus என்று பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த பஸ்சில் பொருத்தப்பட்டிருக்கும் எரிவாயு கொள்கலனை முழுமையாக நிரப்பும்போது, 300கிமீ தூரம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் 40 பேர் பயணிக்க முடியும்.

டீசல் பஸ்களை ஒப்பிடும்போது இது 30 சதவீதம் குறைவான கார்பனை வெளியிடும் தன்மை கொண்டது. இதனால், சுற்றுப்புற சீர்கேட்டை குறைக்கும் தொழில்நுட்பம் கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.
தள்ளுபடி விலையில் ஆட்டோமொபைல் ஆக்சஸெரீஸ்!
ஓர் ஆண்டில் ஒருவரின் கழிவு மற்றும் அவர் வீணாக்கும் உணவுப் பொருட்களை கொண்டு இந்த பஸ்சை 59 கிமீ தூரம் வரை இயக்க முடியும். பிரிஸ்டல் விமான நிலையத்திலிருந்து பாத் என்ற இடத்திற்கு இந்த புதிய தொழில்நுட்பத்திலான பஸ் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








