இந்த ஆண்டின் ஐரோப்பாவின் சிறந்த காராக வாகை சூடிய பீஜோ 308 கார்!
இந்த ஆண்டின் ஐரோப்பாவின் சிறந்த கார் மாடல் விருதை பீஜோ 308 கார் வென்றுள்ளது. பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார், மஸ்தா 3 மற்றும் ஸ்கோடா ஆக்டாவியா ஆகிய கார்களும் மல்லுக்கட்டிய நிலையில், பீஜோ 308 கார் சிறந்த கார் விருதை பெற்று அசத்தியுள்ளது.
ஐரோப்பாவின் சிறந்த கார் மாடல் விருதை 4-வது முறையாக பீஜோ தயாரிப்பு பெறுகிறது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 22 நாடுகளின் ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் நடுவர்களாக செயல்பட்டு இந்த விருதுகளை தேர்வு செய்தனர்.
ஐரோப்பாவின் சிறந்த கார் மாடல் விருதுக்காக இறுதி பட்டியலில் இடம்பிடித்த 7 கார் மாடல்களையும், மதிப்பீடுகளின் அடிப்படையில் அவைகள் பெற்ற புள்ளிகளையும் ஸ்லைடரில் காணலாம்.

பீஜோ 308 கார்
மொத்தம் 307 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த பீஜோ 308 கார் ஐரோப்பாவின் சிறந்த கார் விருதை தட்டிச் சென்றது.

பிஎம்டபிள்யூ ஐ3
இங்கிலாந்து நாட்டின் சிறந்த கார் மாடல் விருதை சமீபத்தில் வென்ற பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் காருக்குத்தான் ஐரோப்பாவின் சிறந்த கார் மாடல் விருதும் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், பிஎம்டபிள்யூ ஐ3 கார் வெறும் 223 புள்ளிகளை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது.

தெஸ்லா மாடல் எஸ் கார்
மிகச்சிறந்த எலக்ட்ரிக் காராக கூறப்பட்டு வரும் அமெரிக்க தயாரிப்பான தெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார் 216 புள்ளிகளை பெற்றது.

சிட்ரோவன் சி4 பிகாசோ கார்
சிட்ரோவன் சி4 பிகாசோ கார் 182 புள்ளிகளை பெற்று 4-ஆம் இடத்தை பெற்றது.

மஸ்தா- 3 கார்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்றான மஸ்தா 3 கார் 180 புள்ளிகளை பெற்று 5ம் இடத்தை பிடித்தது.

ஸ்கோடா ஆக்டாவியா கார்
பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள், ஸ்டைலான டிசைனில் வந்த புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான் கார் 172 புள்ளிகளை பெற்றது.

பென்ஸ் எஸ் கிளாஸ்
உலகின் சிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக கூறப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் 170 புள்ளிகளை பெற்று இறுதிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.


Click it and Unblock the Notifications








