புதிய ஃபெராரி 458 ஸ்பெஷல் ஏ காரின் படங்கள் வெளியீடு!
ஃபெராரி காரை சொந்தமாக்கும்போது கிடைக்கும் பேரானந்தத்தில் திளைத்த பலர் அந்த பிராண்டு கார்களின் சேகரிப்பாளர்களாகவே மாறிவிட்டனர். அதிலும், லிமிடேட் எடிசன் மாடல்களுக்கு வரவேற்பு அதிகம். அந்த வகையில், ஃபெராரி நிறுவனம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் புதிய லிமிடேட் எடிசன் மாடலை வெளியிட்டிருக்கிறது.
ஃபெராரி 458 ஸ்பெஷல் அபர்ட்டா என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த கார் வரும் 2ந் தேதி பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. இந்த ஃபெராரி கார் அதிகசக்திவாய்ந்த மாடலாக குறிப்பிடப்படுகிறது. திறந்து மூடும் கூரை வசதியுடன் வந்திருக்கும் இந்த ஸ்பெஷலான கார் பற்றிய படங்கள் மற்றும் கூடுதல் செய்திகளை ஸ்லைடரில் காணலாம்.

பெயர்
ஃபெராரி 458 ஸ்பெஷல் ஏ என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரின் பெயரில் ஏ என்ற அழுத்து Aperta என்பதும், அது இத்தாலி மொழியில் "திறந்த" என்பதை குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடல்
ஃபெராரி 458 காரின் ஸ்பைடர் மாடலாக, அதாவது திறந்து மூடும் வசதி கொண்ட மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இத்தாலி தயாரிப்புகளிலேயே மிகவும் சக்திவாய்ந்த, அதிவேகம் கொண்ட ஸ்பைடல் மாடலாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

எஞ்சின்
இந்த காரில் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 597 எச்பி பவரையும், 540 என்எம் டார்க்கையும் அளிக்கும் 4.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 100 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

இன்டிரியர்
கருப்பு, மஞ்சள் நிற இன்டிரியர், உயர்தர லெதர் வேலைப்பாடுகள், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் வீல் என அசத்தலான அம்சங்களுடன் வருகிறது.

பிரத்யேக வண்ணம்
பிரத்யேக மஞ்சள் வண்ணத்தில் வந்திருக்கும் இந்த கார் ஏராளமான பிரிமியம் அம்சங்களுடன் வருகிறது. இது சிறந்த ஏரோடைனமிக் கொண்டதாகவும் இருக்கும்.

லிமிடேட் எடிசன்
மொத்தம் 499 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








