ஃபியட் சிஇஓ.,வுடன் டிஷ்யூம் டிஷ்யூம்... பதவி விலகுகிறார் ஃபெராரி தலைவர்!
ஃபியட் கிறைஸ்லர் நிறுவனத்தின் சிஇஓ.,வுடன் ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து, ஃபெராரி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து லூகா டி மான்டிஸிமோலோ விரைவில் பதவி விலகுகிறார்.
இத்தாலியை சேர்ந்த புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி ஃபியட் கிறைஸ்லர் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த 23 ஆண்டுகளாக ஃபெராரி நிறுவனத்தின் தலைவராக லூகா டி மான்டிஸிமோலோ பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், ஃபியட் கிறைஸ்லர் குழுமத்தின் சிஇஓ., செர்ஜியோ மர்ஷியான் ஃபெராரி நிறுவனத்தின் வணிகத் திட்டங்களில் மாறுதல்களை செய்ய முடிவு செய்தார். ஆண்டுக்கு 10,000 கார்களுக்கு மேல் தயாரித்து விற்பனை செய்யவும் முடிவு செய்தார்.
ஆனால், இதற்கு ஃபெராரி தலைவராக இருந்து வரும் லூகா ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதிக கார்களை தயாரித்து விற்பதால் பிராண்டு மதிப்பு குறையும் என்பது லூகாவின் எண்ணம். இதனால், கருத்து மோதல்கள் நீட்டித்து வந்தன.
இந்த நிலையில், ஃபெராரி நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விரைவில் விலகப்போவதாக லுகா அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 13ந் தேதி ஃபெராரி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஃபியட் கிறைஸ்லர் சிஇஓ., செர்ஜியோ மர்ஷியான் ஏற்க உள்ளார்.


Click it and Unblock the Notifications








