ஃபெராரி எஃப்60 லிமிடேட் எடிசன் கார்கள் விற்று தீர்ந்தன...!

By Saravana

வட அமெரிக்காவில் ஃபெராரி நிறுவனம் கால் பதித்து 60ம் ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில், புதிய ஃபெராரி எஃப்60 கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபெராரி காதலர்களுக்காக களமிறக்கப்பட்ட இந்த மாடலில் மொத்தம் 10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், முன்பதிவு துவங்கப்பட்டு ஒரு சில நாட்களிலேயே 10 கார்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களை ஃபெராரி கார் சேகரிப்பாளர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.


அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

ஃபெராரி எஃப்-12 பெர்லினேட்டா காரின் ஓபன் டாப் மாடலாக இந்த புதிய ஃபெராரி எஃப்60 கார் மாற்றங்கள் செய்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 740 பிஎஸ் பவரை அளிக்கும் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த அதிசக்திவாய்ந்த காரில் எலக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் கொண்ட 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 3.1 வினாடிகளில் எட்டும்.

ஓபன் டாப்

ஓபன் டாப்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் இலகு எடை கொண்ட ஃபேப்ரிக் கூரையை 120 கிமீ வேகத்தில் கூட திறந்து மூட முடியும்.

விலை

விலை

2.5 மில்லியன் டாலர் விலையில் இந்த கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2014, 9:18 [IST]
English summary
Italian manufacturer of luxury super cars Ferrari, knows how to celebrate anniversaries of their products. This time the manufacturer was celebrating its 60th year in North America. To mark the occasion they have launched a super limited edition F60 America model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+