யூஸ்டு மார்க்கெட்டுக்கு வந்த முதல் லாஃபெராரி... அதிர்ச்சியும், ஆச்சரியமும்...!!
பெரும் ஆரவாரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல்தான் லாஃபெராரி. இது ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடலும்கூட. மொத்தம் 499 கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய இருப்பதாக ஃபெராரி அறிவித்தது.
இந்த நிலையில், முதலாவது லாஃபெராரி கார் விற்பனையான கையோடு யூஸ்டு கார் மார்க்கெட்டுக்கு வந்து அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. ஜெர்மனியின் மூனிச் நகரை சேர்ந்த SEMCO என்ற யூஸ்டு கார் டீலர் அந்த லாஃபெராரியை விற்பனைக்கு விட்டுள்ளார்.

கூடுதல் விலை
மொத்தம் 200 கிமீ தூரம் ஓடியிருக்கும் அந்த கார் 1.77 மில்லியன் டாலர் விலை கொண்டது. அதனை 2.38 மில்லியன் விலை வைத்து விற்பனைக்கு விட்டுள்ளனர். அதாவது, புதிய ஃபெராரியைவிட இது கூடுதல் விலைக்கு வந்துள்ளது.

க்யூவில் வாடிக்கையாளர்கள்
இந்த காரை வாங்குவதற்கு நிச்சயம் பல கோடீஸ்வரர்கள் காத்திருக்கின்றனர் என்பது வேறு விஷயம். ஏனெனில், ஃபெராரியிடம் நேரிடையாக வாங்குவதற்கு பல விதிமுறைகளை சந்திக்க வேண்டும். ஆனால், இங்கே அந்த பிரச்னை இல்லை. இந்த காரை கொத்திக் கொண்டு போக பல வாடிக்கையாளர்கள் முட்டி மோதுகின்றனர்.

மதிப்பு
சாதாரண கார்களின் நாளுக்கு நாள் மதிப்பு குறையும். ஆனால், இதுபோன்ற கார்களுக்கு நாள் ஆக ஆகத்தான் மதிப்பு எகிறும். இதுபோன்ற கார்களின் மதிப்பை தக்க வைக்கும் விதமாக ஃபெராரி உள்ளிட்ட நிறுவனங்கள் லிமிடேட் எடிசனாக வெளியிடுகின்றன.

டீலருக்கு லாபம்
இந்த காரை விற்பவருக்கு 1 மில்லியன் டாலர் லாபம் கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றன. 499 லாஃபெராரி கார்களில் முதலில் தயாரிக்கப்பட்ட கார் என்பதுடன், இதுதான் யூஸ்டு கார் மார்க்கெட்டுக்கு வந்த முதல் லாஃபெராரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார்
ஃபெராரியின் முதல் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் வந்த தயாரிப்பு நிலை மாடல் 950 எச்பி பவர் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும்.


Click it and Unblock the Notifications








