டட்சன் கோ பட்ஜெட் காரின் சில குறைகள்: ஓர் அலசல் பார்வை

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற பட்ஜெட் காராக டட்சன் கோ நிலைநிறுத்தப்பட உள்ளது.

முன்பதிவு துவங்கிவிட்ட நிலையில், குறைந்த விலை கார் என்பதால் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் வடிவமைப்பில் கையாளப்பட்டுள்ளன. போட்டியாளர்களை விட சிறந்த இடவசதி கொண்ட கார் என்பதில் மறுப்பதற்கில்லை. ஆனால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இந்த காரில் தென்பட்ட சில குறைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டாக்கிங் ஸ்டேஷன் தொல்லை

டாக்கிங் ஸ்டேஷன் தொல்லை

மியூசிக் சிஸ்டம் கூடுதலாக வாங்கி பொருத்தி விட்டால் பரவாயில்லை. இல்லையெனில், டேஷ்போர்டில் இருக்கும் டாக்கிங் ஸ்டேஷனில் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை செங்குத்து நிலையில் வைக்கும்போது, அதன் பின்னால் இருக்கும் ஏசி வென்ட்டை மறைக்கிறது.

கிளவ் பாக்ஸ்

கிளவ் பாக்ஸ்

நிசான் எவாலியா கார் போன்றே இந்த காரின் கிளவ் பாக்ஸும் பூட்டிக் கொள்ளும் வசதி இல்லை. நானோவில் கூட பூட்டும் வசதி கொண்ட கிளவ் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ சுவிட்சுகள்

பவர் விண்டோ சுவிட்சுகள்

முன்புற இருக்கைகளுக்கான பவர் விண்டோஸ் சுவிட்சுகள் முன்புற கதவுகளில் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற பயணிக்கான பவர் விண்டோவை டிரைவர் இயக்குவதற்காக வசதியாக கூடுதல் சுவிட்ச் கொடுக்கப்படவில்லை.

சீட் பெல்ட்

சீட் பெல்ட்

பின் இருக்கை பயணிகளுக்கு தானியங்கி முறையில் சீட் பெல்ட் சரி செய்து கொள்ளும் வசதி இல்லை.

 13 இஞ்ச் சக்கரங்கள்

13 இஞ்ச் சக்கரங்கள்

ஆல்ட்டோ கே10 மற்றும் இயான் போன்ற போட்டியாளர்களைவிட சிறந்த இடவசதி கொண்ட காராக டட்சன் கோ இருக்கிறது. இதன் முக்கிய பலம் இதுவே. அதேவேளை, இந்த காரில் 13 இஞ்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது காருக்கு பொருத்தமாக தெரியவில்லை. மாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் கார்கள் 14 இஞ்ச் வீல்களுடன் கிடைக்கிறது.

இதுவும் ஒரு குறை

இதுவும் ஒரு குறை

சாவி மூலம் பின்புற டெயில் கேட்டை திறக்க முடியாது. டிரைவருக்கு அருகில் இருக்கும் லிவர் மூலமாக மட்டுமே திறக்க இயலும்.

 சிங்கிள் வைப்பர்

சிங்கிள் வைப்பர்

இந்த காரின் வைன்ட்ஷீல்டில் ஒரே ஒரு வைப்பர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மழை நேரங்களில் இந்த சிங்கிள் வைப்பர் மூலம் கண்ணாடி முழுமையாக சுத்தமாகாது என்றே தெரிகிறது. இதன் வைப்பர் மோட்டாரின் செயல்பாடும் சிறப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

கண்ணாடி அட்ஜெஸ்ட்மென்ட்

கண்ணாடி அட்ஜெஸ்ட்மென்ட்

ரியர் வியூ கண்ணாடியை காருக்குள் இருந்தபடியே அட்ஜெஸ்ட் செய்யும் வசதி இல்லை. காரின் கண்ணாடி ஜன்னலை திறந்து வெளிப்புறத்தில் கையை நீட்டி சரி செய்ய வேண்டியிருக்கும். அப்படியில்லையென்றால், காரை விட்டு இறங்கி சரி செய்ய வேண்டும்.

இருக்கை

இருக்கை

இருக்கைகளில் மிக மெல்லிய பேடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், அதிக நேரம் பயணிக்கும்போது சொகுசாக இருக்காது. எது எப்படியிருப்பினும், சிறந்த இடவசதி கொண்ட குறைந்த விலை கார் மாடலாக வர இருக்கிறது. இந்த காரின் சாதக, பாதகங்களின் முழுமையான தகவல்களை விரைவில் வழங்குகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 7, 2014, 14:49 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+