ஃபியட் அவென்டுரா கிராஸ்ஓவரின் முக்கிய விபரங்கள் வெளியானது
சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஃபியட் புன்ட்டோ எவோ அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கிராஸ்ஓவர் மாடலாக வரும் ஃபியட் அவென்டுராவின் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மொத்தம் 5 வேரியண்ட்டுகளில் புதிய அவென்டுரா விற்பனைக்கு வர இருக்கிறது. 6 விதமான பாடி கலர்களில் கிடைக்கும். விரிவான விபரங்களை ஸ்லைடரில் காணலாம்

வேரியண்ட்டுகள்
பெட்ரோல் மாடலில் ஆக்டிவ் மற்றும் டைனமிக் ஆகிய 2 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் ஆக்டிவ், டைனமிக் மற்றும் எமோஷன் ஆகிய 3 வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

எஞ்சின்
ஃபியட் அவென்டுராவின் பெட்ரோல் மாடலில் 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 93 பிஎஸ் பவரை அளிக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது. இதே எஞ்சின்கள் தற்போது ஃபியட் புன்ட்டோ காரில் இருக்கின்றன.

ஆக்சஸெரீஸ்கள்
16 இஞ்ச் அலாய் வீல்கள், பாடி கிளாடிங், பாடி கலர் ரியர் வியூ கண்ணாடிகள், அதே நிறத்தில் கைப்பிடிகள், 100 கிலோ எடை தாங்கும் கேரியர், அலாய் ஸ்பேர் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பேஸ் வேரியண்ட் வசதிகள்
பேஸ் மாடலில் பவர் விண்டோஸ், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ரியர் பார்சல் ட்ரே ஆகியவை இருக்கும்.

மிட் வேரியண்ட் அம்சங்கள்
டைனமிக் வேரியண்ட்டில் ரியர் பவர் விண்டோஸ், ஆடியோ சிஸ்டம், ஃபேப்ரிக் அலங்காரம் கொண்ட கதவு பேனல்கள் மற்றும் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை உள்ளன. எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ கண்ணாடிகளும் இருக்கும். டிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட் வசதி, இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை மிட் வேரியண்ட்டில் நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

எமோஷன் வேரியண்ட்
டீசல் மாடலில் மட்டும் எமோஷன் வேரியண்ட் கிடைக்கும். இதில், ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் பொருத்தப்பட்ட ஸ்டீயரிங் வீல், டியூவல் ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், ரியர் வைப்பர், ரியர் டீஃபாகர், வாய்ஸ் கமாண்ட் வசதிகள் இருக்கும்.

வண்ணங்கள்
ஸபரானோ ஆரஞ்ச், எக்ஸோடிக்கா ரெட், பிரான்ஸோ டேன், வோக்கல் ஒயிட், மினிமல் கிரே, ஹிப்- ஹாப் பிளாக் போன்ற வண்ணங்களில் கிடைக்கும். இதில், ஸபபரானோ ஆரஞ்ச் என்பது பிரத்யேக வண்ணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








