விரைவில் வணிக வளாகங்களில் ஃபியட் அவென்ச்சுராவின் தரிசனம்
நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்களில் புதிய ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மாடல் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஃபியட் புன்ட்டோ எவோ காரின் அடிப்படையிலான கிராஸ்ஓவர் மாடலாக அவென்ச்சுரா மாடல் வர இருக்கிறது.

இந்த புதிய மாடல் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது ஃபியட். விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடலை பிரபலப்படுத்தும் முயற்சிகளை ஃபியட் துவங்க உள்ளது.
தற்போது கார்ப்பரேட் வாசிகள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் புதிய கார் மாடல்களை காட்சிக்கு வைப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், புதிய ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவவர் மாடல் விரைவில் தரிசனம் தர உள்ளது.


Click it and Unblock the Notifications








