21ந் தேதி விற்பனைக்கு வருகிறது புதிய ஃபியட் அவென்ச்சுரா!
ரும் 21ந் தேதி புதிய ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாடல் தற்போது பெரும்பாலான டீலர்ஷிப்புகளுக்கு வந்துவிட்டது.
புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் காரில் கூடுதல் ஆக்சஸெரீஸ் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரித்து கிராஸ்ஓவர் மாடலாக மாற்றியுள்ளனர் ஃபியட் டிசைன் வல்லுனர்கள்.

1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். ஆக்டிவ், டைனமிக் மற்றும் எமோஷன் ஆகிய வேரியண்ட்டுகளில் வருகிறது.
டொயோட்டா எட்டியோஸ் கிராஸ், ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். ரூ.7 லட்சத்தையொட்டி விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த மாதம் அபார்த் 500 காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் திட்டமிட்டுள்ளது. இது பெர்ஃபார்மென்ஸ் ரகத்தை சேர்ந்த மாடலாக வர இருக்கிறது. இந்த இரண்டு மாடல்களும் இந்திய ஃபியட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








