ஃபியட் டீலர்ஷிப்புகளில் பருவமழை கால கார் பரிசோதனை முகாம்!

By Saravana

நாடு முழுவதும் உள்ள ஃபியட் டீலர்ஷிப்புகளில் பருவமழை காலத்துக்கு தேவையான சிறப்பு கார் பரிசோதனைசிறப்பு முகாம் நடக்கிறது.

நேற்று துவங்கிய இந்த சிறப்பு முகாம் நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது. நாடு முழுவதும் 89 நகரங்களில் உள்ள 107 ஃபியட் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது காரை சிறப்புத் தள்ளுபடிகளுடன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

Fiat Linea

பருவமழை காலம் துவங்க இருக்கும் நிலையில், இந்த பரிசோதனை வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த அவசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

வைப்பர், ஹெட்லைட், பனி விளக்குகள், டெயில் லைட்டுகள், மழை சென்சார், பிரேக் பேடுகல் மற்றும் டிஸ்க்குகளை பரிசோதனை செய்து தரப்படும். இதுதவிர, 60 விதமான பரிசோதனைகளை செய்து தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பரிசோதனை முகாமில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களுக்கு லேபர் சார்ஜில் 20 சதவீத கழிவும், உதிரிபாகங்களில் 10 சதவீத கழிவும் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு ஃபியட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 14, 2014, 10:23 [IST]
English summary
Fiat India is back with its annual free monsoon check up camps. The three day free service camps will be held from 13th till 15th June 2014.
மேலும்... #fiat #four wheeler #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+