ஃபியட் கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்!
குளிர்காலம் வருவதையொட்டி, கார்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்களுக்கு ஃபியட் ஏற்பாடு செய்துள்ளது. இன்றுமுதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த பரிசோதனை முகாம் நடக்கிறது.
நாடு முழுவதும் 91 நகரங்களில் உள்ள 106 அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் மையங்கள் மற்றும் டீலர்ஷிப்புகளில் இந்த சிறப்பு பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சிறப்பு பரிசோதனை முகாமில் குளிர்காலத்தில் கார் பராமரிப்புக்கு தேவையான 52 வகையான பரிசோதனைகள் செய்யப்படும்.
மேலும், உதிரிபாகங்கள் மற்றும் சேவையில் கட்டணக் குறைப்பு சலுகைகளை ஃபியட் வழங்குகிறது. லேபர் கட்டணத்தில் 20 சதவீதமும், உதிரிபாகங்கள் மீது 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும். மதிப்புக் கூட்டு சேவையிலும் 10 சதவீதம் கழிவு வழங்கப்படும் என்று ஃபியட் தெரிவித்துள்ளது.
மேலும், வைன்ட்ஷீல்டு க்ளீனிங் சொலியூஷன் இலவசமாக டாப்- அப் செய்து தரப்படும். இந்த சிறப்பு பரிசோதனை முகாம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு இ- மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஃபியட் தெரிவித்துள்ளது.
இன்னும் 'கார்' காலமே முடியலேயே மிஸ்டர் ஃபியட்!


Click it and Unblock the Notifications








