அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது புதிய ஃபியட் அபார்த்!
அடுத்த மாதம் புதிய ஃபியட் அபார்த் 595 காம்படிஷன் கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது, இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் மாடல் என்ற பெருமையை பெறும்.
ஃபியட் பிராண்டின் மதிப்பை உயர்த்துவதற்கான மாடலாக வர இருக்கும் புதிய ஃபியட் அபார்த் 595 காம்படிஷன் கார் மாடல் மும்பையில் நடந்து வரும் ஆட்டோகார் இந்தியா பெர்ஃபார்மென்ஸ் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

புதிய மாடல்
கடந்த பிப்ரவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபியட் அபார்த் 500 மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட அபார்த் 595 காம்படிஷன் மாடல் தற்போது இந்தியாவுக்கான மாடலா அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இறக்குமதி மாடல்
உயர் செயல்திறன் கொண்ட இந்த மாடல் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

எஞ்சின்
இந்த காரில் 158 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட உயர் பெர்ஃபார்மென்ஸ் மாடலாக வருகிறது.

ஆர்டரின் பேரில்...
நாடு முழுவதும் உள்ள ஃபியட் ஷோரூம்களில் முன்பதிவு செய்து இந்த காரை வாங்க முடியும். ஆனால், ஆர்டரின்பேரில் இறக்குமதி செய்து தர ஃபியட் திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்க்கும் விலை
ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என்றுதெரிகிறது.


Click it and Unblock the Notifications








