இந்தியாவுக்காக ஸ்பெஷல் காம்பெக்ட் எஸ்யூவி: ஃபியட் அறிவிப்பு
இந்தியாவுக்காக புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை வடிவமைத்து வருவதாக ஃபியட் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் மாடல்களுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும். இந்த புதிய எஸ்யூவியின் அம்சங்கள் குறித்து ஃபியட் இந்தியா நிர்வாக இயக்குனர் நாகேஷ் பசவனஹள்ளி கூறிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய மாடல்
இது புத்தம் புதிய கான்செப்ட். இதனை இந்தியாவிலேயே வடிவமைக்கிறோம் என ஃபியட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நாகேஷ் பசவனஹள்ளி தெரிவித்துள்ளார்.
குறிப்பு: மாதிரிக்காக ஃபியட் ஜீப்ஸ்டெர் எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிளாட்ஃபார்ம்
அவென்டூரா என்று அழைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி புன்ட்டோ மற்றும் லீனியா கார்கள் வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்படுகின்றன.

சென்னையில் வடிவமைப்பு
சென்னையில் உள்ள ஃபியட் தொழில்நுட்ப மையத்தில் 1,000 எஞ்சினியர்களின் கூட்டு முயற்சியில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இத்தாலியிலுள்ள தலைமை டிசைன் மையத்தின் டிசைன் வல்லுனர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த புதிய கான்செப்ட் மெருகூட்டப்பட்டு வருகிறது.

எஞ்சின்
ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடன் இந்த புதிய எஸ்யூவி வருகிறது.

இந்தியாவில் உற்பத்தி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக ஃபியட் தெரிவித்துள்ளது.

விலை
ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலையில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








