ஆகஸ்ட் 5ல் விற்பனைக்கு வருகிறது ஃபியட் புன்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்!
அடுத்த மாதம் 5ந் தேதி புதுப்பொலிவுடன் கூடிய ஃபியட் புன்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் தனித்து களமிறங்கியிருக்கும் இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் தனது வர்த்தகத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், மேம்படுத்தப்பட்ட புதிய புன்ட்டோ காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது. புன்ட்டோ எவோ என்ற பெயரில் வரும் இந்த புதிய மாடலின் வெளிப்புறத் தோற்றதிலும், இன்டிரியரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய மாடல் போன்றே புன்ட்டோ எவோ மாடலிலும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 76 பிஎஸ் மற்றும் 90 பிஎஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். இதுதவிர, 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் எமோஷன் வேரியண்ட்டில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.
ரியர் ஏசி வென்ட், புளூடூத், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் போன்ற வசதிகளை கொண்டிருக்கும். தற்போதைய மாடலின் விலையையொட்டியதாக புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








