ஃபியட் லீனியா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபியட் லீனியாவின் மேம்படுத்தப்பட்ட மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. ஃபியட் டீலர்களில் ரூ.25,000 முன்பணம் செலுத்தி இந்த புதிய மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், மார்ச் 4ந் தேதி லீனியாவின் மேம்படுத்தப்பட்ட மாடல் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே, தற்போது விலை விபரங்கள் கசிந்துள்ளன.

Fiat Linea Facelift

பெட்ரோல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.7.64 லட்சம் விலையிலும், டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.8.24 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் மாடலில் 114 பிஎஸ் பவரையும், 207 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் டிஜெட் எஞ்சினும், டீசல் மாடலில் 93 பிஎஸ் பவரையும், 209 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

மேலும், புதிய மாடல் லீனியாவில் பெர்லா நதீர் மற்றும் மெக்னீசியம் கிரே என்ற இரண்டு புதிய வண்ணங்களிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 22, 2014, 12:51 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+