இந்தியாவில் அபார்த் 500 காரை அசெம்பிள் செய்ய ஃபியட் திட்டம்
இந்தியாவிலேயே அபார்த் கார்களை அசெம்பிள் செய்வதற்கு ஃபியட் திட்டமிட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் அபார்த் 500 கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஃபியட் 500 கார் ஏற்கனவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்த காரின் அபார்த் என்ற உயர் வகை மாடலை ஃபியட் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
கூடுதல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பில் இருங்கள்.

போட்டியாளர்கள்
மினி கூப்பர் காருடன் இந்த புதிய ஃபியட் அபார்த் 500 கார் மாடல் போட்டியிடும்.

எஞ்சின்
அபார்த் 500 காரில் 1.4 லிட்டர் மல்டிஏர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 160 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும்.

இறக்குமதி
முதலில் இறக்குமதி செய்து அபார்த் 500 கார்களை விற்பனை செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது. பின்னர், இந்தியாவிலேயே அபார்த் 500 காரை அசெம்பிள் செய்யவும் முடிவு செய்து வைத்துள்ளது.

விலை
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்போது, இந்த காரின் விலை ரூ.20 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.

அபார்த் புன்ட்டோ இல்லை
அபார்த் புன்ட்டோ மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் தற்போது இல்லை என்று ஃபியட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








