ஆகஸ்ட் 8ல் விற்பனைக்கு வருகிறது புதிய ஃபியட் புன்ட்டோ எவோ!
வரும் 8ந் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் புதிய ஃபியட் புன்ட்டோ எவோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
லீனியா ஃபேஸ்லிஃப்ட் மாடலைத் தொடர்ந்து ஃபியட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கும் மாடல் இது. டிசைனிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இன்டிரியர் வேலைப்பாடுகளும் கவர்ச்சியாக மாறியுள்ளன.

ஆனால், எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. முந்தைய மாடலில் இருந்த அதே பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் வருகிறது. மேலும், இந்த எஞ்சின்கள் வெவ்வேறு ட்யூனிங் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.
புதிய ஃபியட் புன்ட்டோ எவோ காரின் டாப் வேரியண்ட் ரூ.7.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் ஐ20 மற்றும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








