ஃபியட் அவென்டூரா கிராஸ்ஓவர் அறிமுகம் - படங்களுடன் விபரம்
புன்ட்டோ கார் அடிப்படையிலான அவென்டூரா என்ற பெயரில் புதிய காம்பெக்ட் கிராஸ்ஓவர் மாடலை ஃபியட் அறிமுகம் செய்துள்ளது.
ஆஃப் ரோடு மற்றும் சாகச விரும்பிகளுக்கான மாடலாக வருகை தரும் இந்த புதிய கிராஸ்ஓவர் மாடலை இந்த புதிய காம்பெக்ட் கிராஸ்ஓவரை ஃபியட் நிறுவனத்தின் இந்திய டிசைன் டீம் வடிவமைத்துள்ளது.

எஞ்சின்
புன்ட்டோ காரில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் இதிலும் இருக்கும். இது 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

பெட்ரோல் மாடல்
பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் எஞ்சினுடன் வரும் என தெரிகிறது.

ஆக்சஸெரீஸ்கள்
அவென்டூரா பேட்ஜ், ரூஃப் ரெயில்கள், சைடு கிளாடிங் என ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்பேர் வீல்
எஸ்யூவி தோற்றத்தை கொடுக்கும் வகையில், பின்புற டெயில் கேட்டில் ஸ்பேர் வீல் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்
ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ மற்றும் டொயோட்டா எட்டியோஸ் கிராஸ் கார்களுக்கு போட்டியாக வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








