ரெனோ கோலியோஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: சல்மான்கானுக்கு முதல் எஸ்யூவி!
இந்தியாவில் ரெனோ கோலியோஸ் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. புதிய கோலியோஸ் எஸ்யூவியின் முதல் வாடிக்கையாளரான பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு இன்று நடந்த நிகழ்ச்சியில் காரின் சாவி வழங்கப்பட்டது.
டிசைன் மற்றும் வசதிகளில் புதிய கோலியோஸ் பல்வேறு விதத்திலும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய முன்பக்க கிரில், மறுவடிவமைப்பு பெற்ற பம்பர்கள், டியூவல் டோன் வீல் டிசைன், லெதர் அப்ஹோல்ஸ்டரி, மரவேலைப்பாடு கொண்ட டேஷ்போர்டு என பிரிமியம் இமேஜை உயர்த்திப் பிடிக்கும் அம்சங்கள் புதிய ரெனோ கோலியோஸ் எஸ்யூவியில் இருக்கின்றன.

ஆர் லிங்க் மல்டி மீடியா சிஸ்டம், 7 இஞ்ச்திரை, ஜாய் ஸ்டிக், ரிவர்ஸ் கேமரா, டியூவல் டோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் சிஸ்டம் போன்ற குறிப்பிடத்தக்க வசதிகள் உள்ளன. இதுவரை 4 வீல் டிரைவ் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய கோலியோஸ் மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதேபோன்று, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட மாடல் 4 வீல் டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட மாடலில் 173 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
2 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 17.15 கிமீ மைலேஜையும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட 4 வீல் டிரைவ் மாடல் லிட்டருக்கு 16.26 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் 14.56 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








