ரூ.5.5 கோடிக்கு ஏலம் போன ஸ்பெஷல் ஃபெராரி கார்!

By Saravana

அமெரிக்க மண்ணில் கால் பதித்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் விதத்தில், ஃபெராரி கார் நிறுவனம் இரண்டு புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஃபெராரி எஃப்60 என்ற மாடல் லிமிடேட் எடிசனாக அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தம் 10 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த 10 கார்களுக்கும் ஒரு சில நாட்களில் முன்பதிவு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

Ferrari 458 Speciale A

மற்றொன்று ஃபெராரி 458 ஸ்பெஷல் ஏ என்ற மாடல். இந்த மாடலில் 499 கார்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கார் கன்வெர்ட்டிபிள் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் கலிஃபோர்னியாவில் நடந்த ஃபெராரியின் 60ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஃபெராரி 458 ஸ்பெஷல் ஏ மாடலில் வெளியிடப்பட்ட முதல் கார் ஏலத்தில் விடப்பட்டது.

அந்த கார் ரூ.5.5 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏலத் தொகை அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இத்தாலியை சேர்ந்த ஓர் அறக்கட்டளையின் கிளைக்கு வழங்கப்பட உள்ளது. இந்த தொகை மரபு வழியில் வரும் அரிய நோய்களுக்கான ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 16, 2014, 9:30 [IST]
English summary
Ferrari recently celebrated its 60th year in the US in Beverly Hills. During this big party, the Italian manufacturer unveiled the Ferrari F 60 America, an ultra exclusive convertible, of which only 10 units will be made. Along with this, Ferrari also unveiled the first 458 Speciale A, which was auctioned out. The buyer, David Gooding, bought the car for a whopping USD 900,000!
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+