தமிழகத்தில் புதிய எஞ்சின் ஆலை அமைக்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ்!
ரூ.100 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய வாகன எஞ்சின் ஆலையை அமைக்க இருப்பதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
புனேயை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சிறிய மற்றும் நடுத்தர வகை வர்த்தக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. டெம்போ டிராவலர், டிராக்ஸ் போன்ற பயணிகள் வாகனங்களையும், ஃபோர்ஸ் ஒன் என்ற எஸ்யூவி மாடலையும் விற்பனை செய்து வருகிறது. இதுதவிர, டிராக்டர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டில் இந்த புதிய வாகன எஞ்சின் தயாரிப்பு ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. புனேயில் நேற்று நடந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி முதலீட்டில் இந்த புதிய ஆலையை அமைக்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஆலையில் வாகன எஞ்சின் ஒருங்கிணைப்பு, கியர் பாக்ஸ் ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








