சூரிய மின்சக்தியில் இயங்கும் புதிய ஃபோர்டு ஹேட்ச்பேக் கார்

சூரிய மின்சக்தி மூலம் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான புதிய தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் காரை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது. நிசான் லீஃப் உள்ளிட்ட கார்களில் சூரிய சக்தியை மின் ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், அதைவிட இந்த காரில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மின்னணு சாதன கண்காட்சியில் ஃபோர்டு சி மேக்ஸ் சோலார் எனர்ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஹைபிரிட் கான்செப்ட் காரை ஃபோர்டு பார்வைக்கு வைக்க உள்ளது.

ஃபோர்டு சி மேக்ஸ் ஹைபிரிட்

ஃபோர்டு சி மேக்ஸ் ஹைபிரிட்

ஃபோர்டு சி மேக்ஸ் ஹைபிரிட் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து கூடுதலாக பெறும் வகையில் இந்த கான்செப்ட் காரின் கூரையில் சூரிய சக்தி மின்தகடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காரில் புதிய தொழில்நுட்பத்தில் சூரிய மின்சக்தியை பெறும் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

 புதிய நுட்பம்

புதிய நுட்பம்

பிற கார்களில் நேரடியாக சூரிய ஒளியை பெற்று அதனை மின் ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பம் கொண்ட தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த காரில் ஃப்ரெஸ்னல் லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கார் நிறுத்தப்பட்டிருக்கும்போது சூரிய ஒளியை உள்வாங்கி அதனை பூதக் கண்ணாடி போன்று கூடுதல் வீரியமிக்கதாக மாற்றி சோலார் பேனல்களுக்கு செலுத்தும். அதனை சோலார் பேனல்கள் மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும். சூரியனின் நகர்வுக்கு தகுந்தாற்போல் ஆற்றல் மிக்க சூரிய ஒளியை கிரகிக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

சார்ஜ் நேரம்

சார்ஜ் நேரம்

4 மணி நேரம் வீட்டில் சார்ஜ் செய்வதும், ஒரு நாள் முழுவதும் காரை நிறுத்தியிருக்கும்போது கிடைக்கும் சூரிய மின் சக்தியும் இணையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுமையாக பெட்ரோல் மற்றும் சார்ஜ் நிரப்பிய நிலையில், இரண்டு எரிபொருளிலும் சேர்த்து இயங்கும் ஹைபிரிட் மோடில் இந்த கார் 1,000 கிலோமீட்டர் வரை செல்லுமாம். அதேவேளை, வெறும் மின்சக்தியை மட்டுமே பயன்படுத்திச் செல்லும்போது 33 கிமீ வரை மட்டுமே செல்ல முடியும்.

 தொழில்நுட்ப உதவி

தொழில்நுட்ப உதவி

இந்த புதிய காருக்கான சூரிய மின் சக்தி பெறும் தொழில்நுட்பத்தை ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கலிஃபோர்னியாவை சேர்ந்த சன்பவர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஃபோர்டு உருவாக்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 3, 2014, 12:58 [IST]
English summary
Ford will bring its C-Max Energi Plug-in Hybrid hatchback to the 2014 Consumer Electronic Show to where it will showcase a new development in the field of green cars. This particular C-Max is capable charging itself with solar energy.
மேலும்... #ford #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+