ஒரு லட்சம் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனை: ஃபோர்டு இந்தியா சாதனை

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு லட்சம் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளதாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிக அதிக விருதுகளை பெற்ற எஸ்யூவி மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய ஆதரவை பெற்றது. குறிப்பாக, 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடல் அதிக வரவேற்பை பெற்றது.

Ford Ecosport

முன்பதிவிலும் போட்டியாளர்களை பொறாமை கொள்ளும் அளவிற்கு எண்ணிக்கையை பெற்றது. மேலும், சென்னையிலுள்ள ஆலையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 14 மாதங்களில் ஒரு லட்சம் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ளதாக ஃபோர்டு இந்தியா தெரிவித்துள்ளது. இதில், உள்நாட்டில் 60,000 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளையும், ஏற்றுமதி வாயிலாக 40,000 எஸ்யூவிகளையும் ஃபோர்டு இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இருந்து வரும் டிமான்ட் காரணமாக உற்பத்தியை அதிகரிக்கப் போவதாகவும் சமீபத்தில் ஃபோர்டு தெரிவித்திருந்தது. இதனால், ஈக்கோஸ்போர்ட்டுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2014, 8:57 [IST]
English summary
Ford India has achieved a milestone of selling 1,00,000 units of EcoSport from India alone. These figures include domestic as well as export vehicles by the American manufacturer. Ford has over 60,000 EcoSport currently running on Indian roads.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+