புதிய ஃபோர்டு கான்செப்ட் காரின் டீசர் வெளியீடு!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய காம்பெக்ட் கார் கான்செப்ட் டீசரை ஃபோர்டு வெளியிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்ட கா கார் கான்செப்ட்டையே டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிக்கு வைக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய கான்செப்ட் அடிப்படையில்தான் புதிய ஃபிகோ கார் வடிவமைக்கப்படும். எனவே, இந்த புதிய கான்செப்ட் மீது இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆவல் எழுந்துள்ளது.
சிறந்த இடவசதி, அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் போதுமான வசதிகளுடன் வர இருக்கும் இந்த புதிய காம்பெக்ட் காரில் ஸ்மார்ட்போன் டாக்கிங் ஸ்டேஸ்ஷன் மற்றும் ஃபோர்டின் சிங்க் தொழில்நுட்பம் ஆகியவை இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








