'தீபாவளி ரிட்டர்ன்ஸ்!'... ஃபோர்டு கார்களுக்கு சிறப்புச் சலுகைகள்!
கார் விற்பனையை ஊக்குவிப்பதற்காக தீபாவளி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் சிறப்புச் சேமிப்பு சலுகைகளை ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
தள்ளுபடி, பரிசுகள் மற்றும் குறிப்பிட்ட ஆக்சஸெரீகள் மீது 50 சதவீதம் தள்ளுபடி என அமர்க்களமான இந்த ஆஃபர்களை இன்று முதல் வரும் 7ந் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

சலுகை விபரம்
ஒவ்வொரு காருக்கான சிறப்புச் சலுகைகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ஃபோர்டு ஃபியஸ்ட்டா
ஃபோர்டு ஃபியஸ்ட்டா செடான் காருக்கு அதிகபட்சமாக ரூ.54,000 வரையிலான சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, சிறப்பு பரிசுகளையும் வழங்குவதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ஃபோர்டு ஃபியஸ்ட்டா கார் டீசல் மாடலில் கிடைக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ
ஃபோர்டு ஃபிகோ காருக்கு ரூ.77,000 வரையிலான சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வரும் 7ந் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3.87 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ஃபோர்டு ஃபிகோ கார் கிடைக்கிறது.

ஃபோர்டு எண்டெவர்
ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சேமிப்புச் சலுகைகளை ஃபோர்டு அறிவித்துள்ளது. ரூ.20.32 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி கிடைக்கிறது.

ஃபோர்டு கிளாசிக்
ஃபோர்டு கிளாசிக் காருக்கு ரூ.75,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.4.90 லட்சம் விலையிலிருந்து புதிய ஃபோர்டு கிளாஸிக் செடான் கார் கிடைக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ரூ.9,999 தவணைத் திட்டத்தில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை ஃபோர்டு வழங்குகிறது. ரூ.6.46 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








