உலகின் சிறந்த கார் எஞ்சினாக ஃபோர்டு 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் தேர்வு

By Saravana

உலகின் சிறந்த கார் எஞ்சினுக்கான விருதை ஃபோர்டு ஈக்கோஸ்பூஸ்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றுள்ளது. சூப்பர் கார் தயாரிப்பாளர்களின் அதிநவீன தொழில்நுட்ப எஞ்சின்களின் கடும் போட்டிக்கு மத்தியில் ஃபோர்டு ஈக்கோஸ்பூஸ்ட் 1.0 லிட்டர் எஞ்சின் இந்த பெருமையை பெற்றுள்ளது.

அதுமட்டமில்லாமல், உலகின் சிறந்த கார் எஞ்சின் விருதை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தக்க வைத்துள்ளது. சர்வதேச அளவில் விற்பனையாகும் ஃபோர்டு நிறுவனத்தின் பல கார்களில் இந்த புதிய எஞ்சின் இடம்பெற்றுள்ளது.


 சக்திவாய்ந்த டர்போசார்ஜர்

சக்திவாய்ந்த டர்போசார்ஜர்

ஃபார்முலா- 1 கார்களின் எஞ்சினில் இருக்கும் டர்போசார்ஜர்களை விட இந்த எஞ்சினில் இருக்கும் டர்போசார்ஜர் இருமடங்கு அதிக வேகத்தில் சுழலும் திறன் கொண்டதாக இருக்கிறது. பெர்ஃபார்மென்சிலும் 1.5 லிட்டர் எஞ்சினுக்கு இணையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈக்கோபூஸ்ட் மாடல்கள்

ஈக்கோபூஸ்ட் மாடல்கள்

1.0 லிட்டர், 1.5 லிட்டர், 1.6 லிட்டர், 2.0 லிட்டர் மற்றும் ட்வின் டர்போ கொண்ட 3.5 லிட்டர் மாடல்களில் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்களை ஃபோர்டு தயாரித்து வருகிறது.

இந்தியாவில் வரவேற்பு

இந்தியாவில் வரவேற்பு

இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மட்டுமே இந்த புதிய எஞ்சினுடன் கிடைக்கிறது. அதிக பவர், அதிக மைலேஜ் தரும் வகையில் வடிவமைகக்ப்பட்டிருக்கும் இந்த சிறிய வகை பெட்ரோல் எஞ்சின் வாடிக்கையாளர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 இந்திய ஈக்கோபூஸ்ட்...

இந்திய ஈக்கோபூஸ்ட்...

இந்தியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மட்டும் தற்போது 3 சிலிண்டர் கொண்ட 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடலின் டைட்டானியம், டைட்டானியம் ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் எஞ்சினுக்கு 120 பிஎச்பி பவரையும் அளிக்கும். மேலும், இந்தியாவிலும் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்ட ஈக்கோஸ்போர்ட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடலுக்கான முன்பதிவையும் ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

 உற்பத்தி சாதனை

உற்பத்தி சாதனை

இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான ஈக்கோபூஸ்ட் எஞ்சின்களை ஃபோர்டு உற்பத்தி செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 26, 2014, 15:10 [IST]
English summary
Now the 1.0-litre EcoBoost engine has been awarded the International Engine of the Year 2014. This is the third time in a row Ford's revolutionary engine has won the engine of the year award. It has defeated engines made for supercars as well that were nominated for the award.
மேலும்... #ford #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+