பெங்களூரில் ஈக்கோஸ்போர்ட்டை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வாய்ப்பு
பெங்களூரை சேர்ந்த ஸூம் டாக்சி நிறுவனம் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை வாடகைக்கு எடுத்து சொந்தமாக ஓட்டும்(Self- Drive) வாய்ப்பை வழங்குகிறது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் நீண்ட காத்திருப்பு காலத்தால் வாங்க முடியாமல் சலித்து போனவர்களுக்கு இது நிச்சயம் நல்ல வாய்ப்பாக அமையும்.

ஆன்லைன் புக்கிங்
ஈக்கோஸ்போர்ட்டை வேண்டும் என்பவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை ஸூம் கார் நிறுவனம் வழங்குகிறது.

டெபாசிட் இல்லை
சொந்தமாக வாடகைக்கு எடுத்துக் கொள்பவர்கள் டெபாசிட் தொகை எதுவும் செலுத்த தேவையில்லை என்றும் ஸும் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடகையை மட்டும் செலுத்தி எடுத்துக் கொள்ளலாம்.

வாடகை
மணிக்கணக்கிலும், நாள் வாடகை மற்றும் வார வாடகைக்கும் கார்களை பெற்றுக் கொள்ளலாம்.

பிக்கப் பாயிண்டுகள்
பெங்களூரில், டொம்லூர், ஹெப்பால், ஈஜிபுரா, மந்த்ரி கார்டன்ஸ், ஓசூர் ரோடு, கொரமங்களா, ஒயிட்ஃபீல்டு, ரெசிடென்சி ரோடு, அல்சூர், ஜெ.பி.நகர மற்றும் மல்லேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கார் பிக்கப் பாயிண்டுகள் உள்ளன.

இதர கார்கள்
ஈக்கோஸ்போர்ட் தவிர்த்து, ஃபோர்டு ஃபிகோ, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஆகிய கார்களும் வாடகைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விபரங்கள்
வாடகை கட்டணம், தொடர்பு தொலைபேசி எண்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








