இனி ராணுவ கேண்டீன் ஸ்டோர்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கிடைக்கும்!
அதிக விருதுகளை வென்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மத்திய பாதுகாப்புத் துறை கேண்டீன் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை பணியாளர்களுக்கான கேண்டீன் ஸ்டோர்களிலும்(CSD), மத்திய காவல்துறை கேண்டீன் ஸ்டோர்களிலும்(CPC) சிறப்புச் சலுகைகளுடன் ஃபோர்டு கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஃபோர்டு ஃபிகோ, ஃபோர்டு கிளாஸிக் மற்றும் ஃபோர்டு எண்டெவர் ஆகிய மாடல்கள் இந்த கேண்டீன் ஸ்டோர்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில், இனி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியும் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஃபோர்டு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு சிறப்புச் சலுகைகளுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், டெலிவிரி வழங்குவதிலும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஃபோர்டு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








