2-வது முறையாக ஈக்கோஸ்போர்ட் விலை உயர்வு: முன்பதிவு செய்தோர் அதிருப்தி
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து 2வது முறையாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு முன்பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 60,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய சாதனையை பதிவு செய்ததோடு, ஹேட்ச்பேக் மார்க்கெட்டையம் அசைத்து பார்த்தது.

ஆனால், உற்பத்தியை விட முன்பதிவு எண்ணிக்கை பல மடங்கு அதிகம் இருந்ததால், ஈக்கோஸ்போர்ட்டுக்கான முன்பதிவை தற்காலிகமாக ஃபோர்டு நிறுத்தி வைத்தது.ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் வெற்றிக்கு அதன் சவாலான விலைதான் முக்கிய காரணம்.
அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஃபோர்டு, கடந்த ஆண்டு செப்டம்பரில் ஈக்கோஸ்போர்ட் விலையை உயர்த்தியது.இந்த நிலையில், தற்போது விலை 2வது முறையாக ஈக்கோஸ்போர்ட் விலையை ஃபோர்டு அதிகரித்துள்ளது.
முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முன்பதிவை ரத்து செய்ய விரும்புபவர்களுக்கு பணத்தை திரும்ப தருவதாக ஃபோர்டு அறிவித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.
விலை உயர்வு
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது அறிவிக்கப்பட்ட விலையை விட தற்போது ஈக்கோஸ்போர்ட்டின் விலை விபரத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.
பெட்ரோல் பேஸ் மாடலின் விலை தற்போது ரூ.60,000 கூடுதலாகி இருக்கிறது.
ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.61,000 அதிகரித்துள்ளது.
ஆட்டோமேட்டிக் மாடலின் விலை ரூ,59,000 வரை கூடுதலாகியுள்ளது.
டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் விலை தற்போது ரூ.69,000 வரை அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்து காத்திருப்போரின் தலையில் இந்த கூடுதல் சுமை விழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








