ஈக்கோஸ்போர்ட்டுக்கு மீண்டும் எகிறும் 'க்யூ': விழி பிதுங்கி நிற்கும் ஃபோர்டு

By Saravana

இடைக்கால பட்ஜெட் எதிரொலியால் விலை குறைக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால், காத்திருப்பு காலம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

குறைந்த காலக்கட்டத்தில் மிக அதிக அளவில் முன்பதிவுகளை அள்ளியது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். உற்பத்தியைவிட தேவையின் விகிதம் அதிகரித்ததால், ஈக்கோஸ்போர்ட்டின் சில வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவை ஃபோர்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டில் எதிரொலியால் விலை குறையும் வாய்ப்பும் இருப்பதால், ஈக்கோஸ்போர்ட்டின் காத்திருப்பு காலம் மேலும் அதிகரித்து வருகிறது.

உற்பத்தி விகிதம்

உற்பத்தி விகிதம்

உற்பத்தியைவிட பன்மடங்கு தேவை அதிகமாக இருப்பதால் தற்போது ஈக்கோஸ்போர்ட்டின் ஆட்டோமேட்டிக் உள்பட சில வேரியண்ட்டுகளின் முன்பதிவு மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேவை அதிகம்

தேவை அதிகம்

உள்நாட்டு தேவை மட்டுமின்றி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் இங்கிருந்துதான் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தி செய்து அனுப்பப்படுகிறது. இதனால், உள்நாட்டு தேவையை சரிவர பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஃபோர்டு தவித்து வருகிறது.

மூன்றாவது ஷிப்ட்

மூன்றாவது ஷிப்ட்

சென்னையிலிருக்கும் ஃபோர்டு ஆலையில் இரண்டு ஷிப்டுகளில் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஷிப்ட்டுக்கு தலா 350 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தேவையை பூர்த்தி செய்யததால், மூன்றாவது ஷிப்ட்டிலும் உற்பத்தியை துவங்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறது ஃபோர்டு.

 சிக்கல்

சிக்கல்

மூன்றாவது ஷிப்ட்டில் உற்பத்தியை துவங்குவதில் சிக்கல் இருக்கிறது. ஈக்கோஸ்போர்ட்டுக்கு தேவையான மெட்டல் ஷீட்டுகள் உள்ளிட்ட சில முக்கிய மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், அவற்றின் சப்ளையில் பிரச்னைகள் உள்ளதால், மூன்றாவது ஷிப்ட்டை துவங்க முடியாத நிலை இருக்கிறது.

பட்ஜெட் எஃபெக்ட்

பட்ஜெட் எஃபெக்ட்

மூன்றாவது ஷிப்ட் துவங்க முடியாத நிலையில், இருக்கின்ற ஆர்டர்களை சரிசெய்துவிடும் முனைப்புடன் ஃபோர்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் பட்ஜெட்டில் கார்கள் மீதான வரி குறைப்பு ஃபோர்டுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 விலை குறையும்

விலை குறையும்

ஈக்கோஸ்போர்ட் விலை குறைப்பு பற்றி ஃபோர்டு இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால், வரிச் சலுகையை பயன்படுத்தி விலையை குறைத்தால் ஈக்கோஸ்போர்ட்டின் விலை ரூ.30,000 வரை குறையும்.

 காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

விலை குறைப்பு செய்தால், காத்திருப்பு காலம் முன்பைவிட மேலும் சிக்கலாகும் சூழ்நிலை எழுந்துள்ளது. ஏனைய கார் நிறுவனங்கள் விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், விலை குறைப்பு குறித்து ஃபோர்டு இதுவரை வாய் திறக்காமல் இருந்து வருவதற்கு இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர் ஆர்வம்

வாடிக்கையாளர் ஆர்வம்

விலை குறைப்பு செய்தால் மிக கவர்ச்சிகரமான விலையில் ஈக்கோஸ்போர்ட் கிடைக்கும். விலை குறைப்பு செய்யும் வாய்ப்பு இருப்பதாக எழுந்த தகவலால், ஈக்கோஸ்போர்ட்டை முன்பதிவு செய்வதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் ஃபோர்டு ஷோரூம்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

முன்பதிவு

முன்பதிவு

சென்னையில் ரூ.50,000 முன்பணத்துடன் பெட்ரோல், டீசல் மாடல்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், வேரியண்ட்டை பொறுத்து 5 மாதங்கள் வரை தற்போது காத்திருப்பு காலம் இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2014, 15:54 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+