ஈக்கோஸ்போர்ட் அழகை கூட்ட பகல்நேர ரன்னிங் விளக்குகள் உட்பட பல கூடுதல் அணிகலன்கள்!
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு பல்வேறு கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பத்தின் பேரில் இந்த ஆக்சஸெரீஸ்களை வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.
இதில், முக்கியமானதாக பகல்நேர ரன்னிங் விளக்குகள் தற்போது ஆப்ஷனலாக கிடைக்கிறது. பல மார்க்கெட்டுகளில் ஏற்கனவே பகல்நேர ரன்னிங் விளக்குகளுடன் ஈக்கோஸ்போர்ட் கிடைக்கிறது. இப்போதுதான் இந்திய மார்க்கெட்டில் ஆப்ஷனல் ஆக்சஸெரீயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ரூ.15,000 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈக்கோஸ்போர்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் பகல்நேர ரன்னிங் விளக்குகளை வாங்கி பொருத்தலாம்.
இதுதவிர, 15 இஞ்ச் அலாய் வீல்கள், பனி விளக்குகள், ரூஃப் ரெயில்கள், ரூஃப் ரேக் டிரே, ரியர் ஸ்பாய்லர், சைடு ரன்னிங் போர்டுகள், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீஸ்களை இனி ஈக்கோஸ்போர்ட் வாடிக்கையாளர்கள் ஆப்ஷனலாக வாங்கிக் கொள்ள முடியும்.
எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம்!!


Click it and Unblock the Notifications








