டீசல் மாடலில் மட்டும் வருகிறது ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஃபோர்டு ஃபியஸ்ட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வருகிறது. ஃபோர்டு இந்தியா இணையதள பக்கத்திலும் தலை காட்டி விட்ட இந்த புதிய மாடல் குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, பெட்ரோல் மாடலில் ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரவில்லை. டீசல் மாடலில் மட்டும் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பின்னர் பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், பாதுகாப்பு வசதிகள் நிறைந்த மாடலாக இருக்கும்.


வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

ஆம்பியன்ட், டிரென்ட் மற்றும் டைட்டானியம் ஆகிய 3 வேரியண்ட்டுகளில் ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் வருகிறது. ஆம்பியன்ட் பேஸ் வேரியண்ட்டில் பல முக்கிய வசதிகள் இருக்காதாம். அதாவது, ஈக்கோஸ்போர்ட்டின் பேஸ் வேரியண்ட்டில் இருக்குமளவுக்கு கூட வசதிகள் இருக்காது. ஆடியோ சிஸ்டமும் பேஸ் வேரியண்ட்டில் கொடுக்கப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

ஏன்?

ஏன்?

மிட்சைஸ் மார்க்கெட்டில் அதிகப்படியாக விலை நிர்ணயிக்கப்பட்ட மாடல் என்ற அவப்பெயரை முந்தைய ஃபியஸ்ட்டா பெற்றுவிட்டது. அந்த அவப்பெயரை மாற்றும் வகையில், பேஸ் வேரியண்ட்டை மிக சவாலான விலையில் நிர்ணயித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாம். அதேவேளை, டைட்டானியம் டாப் வேரியண்ட்டில் பல சிறப்பான வசதிகளை கொடுக்கப்படுமாம்.

டீசல் மாடல்

டீசல் மாடல்

அதிகபட்சமாக 91 பிஎச்பி ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் டிடிசிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

டீசல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சிறிது காலம் கழித்து 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோர்டு முடிவு செய்து வைத்திருக்கிறது.

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

டாப் வேரியணட்டில் தானியங்கி முறையில் செயல்படும் வைப்பர், ஹெட்லைட், பனி விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். கீ லெஸ் என்ட்ரி, ரியர் பார்க்கிங் சென்சார், ஆம்பியன்ட் கேபின் விளக்குகள், பல்வேறு தகவல்களை பெறும் வசதி கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்ற வசதிகளுடன் வருகிறது. மேலும், ஈக்கோஸ்போர்ட் போன்றே ஃபோர்டு சிங்க் என்ற அவசர காலத்திற்கான தொடர்பு வசதியும் இடம்பெற்றிருக்கும்.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

பேஸ் வேரியண்ட் உள்பட மூன்று வேரியண்ட்டுகளிலும் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஏர்பேக்குகள் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.

விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

அடுத்த மாதம் மத்தியில் ஃபோர்டு ஃபியஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 30, 2014, 15:11 [IST]
English summary
Ford Fiesta will be returning back to India in a few weeks time (expected to be mid-June). The 2014 facelifted Ford Fiesta sedan was first showcased in India at the Auto Expo in February and has since been up on its website for everyone to see.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+