ஃபோர்டு இந்தியாவின் புதிய தலைவராக நிகல் ஹாரிஸ் நியமனம்!
ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக நிகேல் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு துணைத் தலைவராக ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், ஃபோர்டு இந்தியாவின் புதிய தலைவராக நாளை பொறுப்பேற்கிறார். கடந்த 1985ம் நியூசிலாந்தில் ஃபோர்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த ஹாரிஸ் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.
தற்போது ஃபோர்டு இந்தியா தலைவராக இருந்து வரும் ஜோகிந்தர் சிங் ஃபோர்டு கார்ப்பரேட் கொள்கை வகுக்கும் இயக்குனராக பதவியேற்க உள்ளதாக ஃபோர்டு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.


Click it and Unblock the Notifications








