வெளிச்சந்தையில் நேரடியாக ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையை துவங்கிய ஃபோர்டு!
வாடிக்கையாளருக்கு சிறப்பான சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கில், டெல்லியில் கார்களுக்கான உதிரிபாக சில்லறை விற்பனையை ஃபோர்டு துவங்கியுள்ளது.
இதுவரை அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் வழியாகத்தான் ஒரிஜினல் உதிரிபாகங்களை கார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இதனால், டீலர்களில் கேட்கும் பணத்தை கொடுத்து கார்களை சர்வீஸ் செய்யும் நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், கார்களுக்கான சர்வீஸ் செலவீனத்தை வெகுவாக குறைக்கும் விதத்தில், உதிரிபாகங்களை வெளிச்சந்தையில் சில்லறையாக விற்கும் சேவையை ஃபோர்டு துவங்கியுள்ளது. டெல்லியில், 10/58 கீர்த்தி நகர் தொழிற்பேட்டை என்ற முகவரியில் இயங்கும் எமினென்ட் என்ற உதிரிபாக வினியோகஸ்தர் மூலமாக ஃபோர்டு கார்களுக்கான உதிரிபாகங்களை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
ரூ.340ல் பைக்அண்ட்வியர் கையுறைகள்!
உதிரிபாகங்கள் சில்லறை விற்பனையை ஃபோர்டு துவங்கியிருப்பதன் மூலமாக இனி தங்களுக்கு விருப்பமான தனியார் சர்வீஸ் மையங்களிலும், மெக்கானிக்குகளிடமும் ஃபோர்டு வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை சர்வீஸ் செய்து கொள்ளும் வாய்ப்பை பெறுவர். இதன்மூலம், குறைவான செலவீனத்தில் சர்வீஸ் செய்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், போலி உதிரிபாகங்களிடமிருந்தும் தப்பிக்க வழி ஏற்பட்டுள்ளது.
டெல்லி மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, கேராள, மஹாராஷ்டிரா மற்றும் கிழக்கு பிராந்தியத்திலும் உதிரிபாக சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாக இருப்பதுடன், டீலர்களில் சர்வீஸ் கட்டணங்களில் நடைபெறும் அடாவடிகள் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை பிற கார் நிறுவனங்களும் பின்பற்றி, உதிரிபாகங்களை நேரடியாக வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முன்வந்தால் வாடிக்கையாளர்கள் பயனுள்ளதாக அமையும்.


Click it and Unblock the Notifications








