ஈக்கோஸ்போர்ட் உள்பட ஃபோர்டு கார்களின் விலை குறைப்பு
ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட தனது கார் மாடல்களின் விலையை ஃபோர்டு நிறுவனம் குறைத்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கான முன்பதிவு அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதுதவிர, ஃபிகோ, ஃபியஸ்ட்டா, எண்டெவர் உள்ளிட்ட மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக எண்டெவர் எஸ்யூவியின் விலை ரூ.1.07 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மாடல் வாரியான விலை குறைப்பு விபரங்களை ஸ்லைடரில் பார்க்கலாம்.

ஃபோர்டு ஃபிகோ
ரூ.4 லட்சம் முதல் ரூ.6.53 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும், ஃபிகோ காரின் விலை அதிகபட்சமாக ரூ.23,399 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு கிளாசிக்
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.59 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும், ஃபோர்டு கிளாசிக் செடான் காரின் விலை அதிகபட்சம் ரூ.24,056 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஈக்கோஸ்போர்ட்
ரூ.6.20 லட்சம் முதல் ரூ.9.75 லட்சம் வரையிலான விற்பனை செய்யப்பட்டு வரும், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் விலை அதிகபட்சமாக ரூ.25,947 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஃபியஸ்ட்டா
ரூ.7.42 லட்சம் முதல் ரூ.10.32 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வரும், ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரின் விலை ரூ.32,961 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டெவர்
ரூ.19.86 லட்சம் முதல் ரூ.23.12 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் விலை அதிகபட்சமாக ரூ.1.07 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








