ஆசிரிய தினம்: ஆசிரியர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் ஃபோர்டு!
நாளை ஆசிரியர் தினத்தையொட்டி, ஆசிரியர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபிகோ மற்றும் கிளாசிக் கார்களுக்கு இந்த சிறப்புச் சலுகைகளை ஆசிரியர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.|

ஃபிகோ கார் மீது ரூ.9,000 வரையிலும், கிளாசிக் கார் மீது ரூ.16,500 வரையிலும் சேமிப்புச் சலுகைகளை பெறலாம்.
இதுதவிர்த்து, எக்ஸ்சேஞ்ச் போனஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகைகளுடன் இலவச இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றையும் பெறும் வாய்ப்பை ஆசிரியர்கள் பெறலாம்.
ஃபிகோ கார் ரூ.3.86 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையிலும், கிளாசிக் கார் மாடல் ரூ.4.88 லட்சம் முதல் ரூ.7.35 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








