சென்னை ஆலையில் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தியை அதிகரிக்கும் ஃபோர்டு
காத்திருப்பு காலத்தை குறைக்கும் வகையில், ஈக்கோஸ்போர்ட் உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.
சென்னை, மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு ஆலையில் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு ஆகிய நிலையிலும், ஈக்கோஸ்போர்ட்டுக்கான காத்திருப்பு காலம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீள்கிறது.

இதனால், ஈக்கோஸ்போர்ட் முன்பதிவு செய்பவர்கள் தங்களது காரை பெறுவதற்கு அதிக காலம் காத்துக்கிடக்கும் நிலை இருக்கிறது. இதனை போக்கும்விதமாக மூன்றாவது ஷிப்டிலும் ஈக்கோஸ்போர்ட் உற்பத்தியை துவங்க இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
மேலும், பேஸ் வேரியண்ட் மாடலில் லாபம் இல்லை என்பதால், அதன் சப்ளை சரிவரி இல்லை என்ற குற்றச்சாட்டையும் ஃபோர்டு மறுத்துள்ளது. டாப் வேரியண்ட் மாடல்களை வாங்குவதற்கே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி முன்பதிவு செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு ஆகிய நிலையில், இதுவரை 63,598 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை ஃபோர்டு விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிகபட்சமாக 6,203 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








