விரைவில் சன் ரூஃப் கொண்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் - விபரம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சன் ரூஃப் கொண்ட ஈக்கோஸ்போர்ட் மாடலின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று கருதப்படுகிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விற்பனை?
தற்போது ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் முன்பதிவு துவங்கிய பின்னர் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சன் ரூஃப் மாடலும் விற்பனைக்கு கிடைக்கும்.

டாப் வேரியண்ட்
ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் சன் ரூஃப் கொண்ட மாடல் டாப் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்படும்.

புதிய அலாய் வீல்
17 இஞ்ச் ரிம் கொண்ட கருப்பு நிறத்திலான அலாய் வீல்களுடனும் இந்த சன் ரூஃப் கொண்ட டாப் வேரியண்ட் ஈக்கோஸ்போர்ட் கிடைக்கும்.

கூடுதல் விலை
சன் ரூஃப், புதிய அலாய் வீல்களுடன் கூடிய ஈக்கோபூஸ்ட் எஞ்சின் டாப் வேரியண்ட் மாடல் ரூ.50,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

அதிக வரவேற்பு
ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், சன் ரூஃப் மற்றும் கருப்பு வண்ண அலாய் வீல்களுடன் வரும்போது இன்னும் அதிக வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








