பண்டிகை கால ஸ்பெஷல்: புதிய ஃபோர்டு ஃபிகோ கார் அறிமுகம்!
பண்டிகை காலத்தையொட்டி, புதுப்பொலிவுடன் கூடிய ஃபோர்டு ஃபிகோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கருப்பு நிற வளையத்துடன் கூடிய பனி விளக்குகள், 14 இஞ்ச் அலாய் வீல்கள், பின்புற பம்பருக்கான வாலன்ஸ் பேனல்கள் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில் நீல நிறத்திலான இன்டிரியர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஃபேப்ரிக் இருக்கைகள், சென்டர் கன்சோலில் நீல நிறத்திலான அலங்காரம் கவர்கிறது.
இதேபோன்று கைப்பிடிகளிலும், டோர் பாக்கெட்டுகளிலும் நீல நிறம் தவழ்கிறது. 8 விதமான வெளிப்புற வண்ணங்களில் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் கிடைக்கும்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் ஃபோர்டு ஃபிகோ கிடைக்கும்.
பெட்ரோல் மாடல் ரூ.3.87 லட்சம் ஆரம்ப விலை முதலும், டீசல் மாடல் ரூ.4.83 லட்சம் ஆரம்ப விலை முதலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








