பிரேசில் மார்க்கெட்டில் புதிய ஃபோர்டு காம்பேக்ட் செடான் அறிமுகமானது!
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் தயாரிப்பு நிலை மாடல் கா என்ற பெயரில் பிரேசில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஃபிகோ செடான் கான்செப்ட் மாடல் தற்போது கா+ என்ற பெயரில் பிரேசிலில் அறிமுகம் செய்யபப்பட்டுள்ளது.
கான்செப்ட் மாடலுக்கும், தயாரிப்பு நிலை மாடலாக வெளியிடப்பட்டிருக்கும் கா+ செடான் காருக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. சிறிய மாறுதல்களை மட்டுமே செய்துள்ளது ஃபோர்டு.

காம்பேக்ட் செடான்
இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் செடானாக விற்பனைக்கு வர இருக்கிறது. ஆனால், பிரேசில் மார்க்கெட்டில் 4 மீட்டருக்கும் அதிகம் நீளம் கொண்டதாக இருக்கும்.

கிளாசிக் காருக்கு மாற்று
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபோர்டு கிளாசிக் செடான் காருக்கு மாற்றாக இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வருவதால் மிக சரியான விலையில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

எஞ்சின்
பிரேசில் மார்க்கெட்டில் கா+ என்ற பெயரில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் ஈக்கோஸ்பூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் டீசல் மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

போட்டி
மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்களால் நெருதுளி பட்டு வரும் காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ செடான் காரும் களமிறங்க உள்ளது வாடிக்கையாளர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எப்போது?
அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய ஃபிகோ காரும், அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய காம்பேக்ட் செடான் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








